பள்ளிக்கு போறோம்
அன்னையின்
சமையலில் காலை உணவுண்டு, பள்ளிக்கு தயராகும் கால்கள்,
உடன் பிரவா
நண்பர்களை போல இணைத்து செல்லும் மாடுகளும் ஆடுகளும்
அவைகளை வழி
அனுப்பி வைக்கும் கோழிகளும் நாய்களும் ,
இதனை வீட்டினுள்
மறைந்திருந்து எட்டி பார்க்கும் எலிகள் ,அவற்றை வேட்டையாட காற்றிருக்கும் பூனைகள்
,
எதிர்வீட்டு
தோழி,பக்கத்துக்கு தெரு நண்பன்......என எறும்புகள் போல பள்ளிக்கு அணிவகுத்து
செல்லும் காலம் அது...
கரும் பலகை
,பலப்பம்,துணிப்பையில் புத்தகம்,சாயம் போன சட்டை,
தப்பு தாளமிடும்
செருப்புகள் , ரெட்டை ஜடை மாணவிகள்,
கலர் கலர்
ரிப்பன்கள் ,சில சைக்கிள்கள்,பல நட வண்டிகள்......
மரத்தடி
பிள்ளையாரை வணங்கி ,ஏரிக்கரைகளை கடந்து,
தேப்பங்குளத்தையும்
தாமரை பூவையும் ரசித்து,
வீசும் தென்றலை
ருசித்து ,பள்ளி வாசலை அடைவோம்...
காலை வணக்கம்
சொல்லி ,கடவுள் வாழ்த்தினை பாடி,
வகுப்பறையில் அமர்வோம்.
கரும் பலகையை
சின்னை கைகளில் துடைத்து,
‘அ’ ன ‘ஆ’ ன
தொடர்வோம்......
வீட்டுபாடம்
மறந்து பிரம்பு அடி வாங்கி,.......
சின்ன சின்ன
குறும்புகள், கிள்ளி விளையாடிய நினைவுகள்,
மதிய உணவு
நேரம்,கொண்டு வந்த உணவுகள், பல்சுவை பந்தியில்
பரிமாறும்,
பாட்டிகடை
பண்டங்கள்- கை முறுக்கு , ஊறுகாய், தேன்மிட்டாய், நெல்லிக்காய்,நாவற் பழம்,
குச்சி மிட்டாய்,
குருவி ரொட்டி....ஒவ்வொன்றும் நாவிற்கு அமுத பானங்கள்
பாடம்படித்த
பின்பு , வீடு செல்லும் போது,.......நண்பர் கூட்டத்தோடு ராகம் படும் மனது
Comments
Post a Comment