சொர்க்கமே என்றாலும்
மலைகளை கடந்து , மேகங்களை
பிளந்து ,
இருளினை விரட்டிட ,சூரியன்
உதயமாகும் நேரம்
கோழி கூவும் , சிட்டு குருவிகள் ராகம் பாடும்,
பசுக்களும் ஆடுகளும் காலை வணக்கமிட
விவசாயிகள் விறு
விறு என விரைந்து செல்ல வெகு தூரத்தில் காற்றினை கிழித்து செல்லும் ரயில் ஓசையில்
அம்மாவின்
கூக்குரலோடு மெல்ல களைந்து செல்லும் கனவு என இனிதே ஆரம்பமாகும் என் கிராமத்து காலை
தினம்....!
வேப்பங்குச்சியில்
பல் துலக்கி , கரும்பு தோட்டமறைவிலுள்ள கிணற்றில் குளியலிட்டு, பசுமையான வயல்
வரப்புகளில் துள்ளி ஓடிய பாதங்கள்....
அவ்வப்போது வந்து
செல்லும் பேரூந்து , அதற்காக காற்றிருக்கும் நேரங்கள்
மண் அடுப்பில்
சமையல், கதவில்லா குளியலறை ,
வளைந்து நெளிந்து
செல்லும் ஆறு, கரையோரம் வீற்றிருக்கும் பிள்ளையார் ,
தண்ணீரை தவழ்ந்து
செல்லும் தரைப் பாலம் ,
ஜல் ஜல் என
ஓட்டமிடும் மாட்டு வண்டி , தாமரை குளம்,வற்றாத ஏரி,
மாசில்லா காற்று
,பறவைகளின் சரணாலயமாய் உள்ள ஆலமரம்,
பேயை போல
பயமுறுத்தும் புளிய மரம், ஓங்கி நிற்குன் பனை மரம் ,
சற்றே வளைந்து
நிற்கும் தென்னை மரம்,மஞ்சள் குங்குமணிந்த வேப்ப மரம்,
காவல்காரன் காவல்
செய்யும் மாந்தோப்பு, வாழை தோப்பு ,பூந்தோட்டம் ..
இவை எல்லாம்
கண்கள் பூத்து குலுங்கும் நினைவுகள்......
Comments
Post a Comment