மாலை முழுதும் விளையாட்டு
பாடம் படித்த
பின்பு ,பள்ளி வாசல் தாண்டி,மாலை வீடு சென்றதும்,
தேநீரை சுவைத்து
விட்டு, தெருவினில் தேர் போல கம்பீரமாய் வீர நடைபோட்ட ஞாபகம்.......
கில்லி ,கோலி,
கபடி என ஆண் காளைகள் செல்ல,
பல்லாங்குழி,நொண்டி
என பெண் மயில்கள் ஆட்டமிட,
பார்த்து
விளையாடுட என பெருசுகள் எச்சரிக்க.....
.மனமும் , உடலும்
புத்துணர்ச்சி பெற்ற நாட்கள் அது!
ஆளில்லா மண்
சாலைகள்,விட்டு விட்டு எரியும் தெரு விளக்குகள்,
தூரத்தில்
ஊளையிடும் நாய்கள்,பயமுறுத்தும் புளிய
மரங்கள்................................................திக் திக் நிமிடங்கள்!
Comments
Post a Comment