Posts

பா.மு - பா.பி

உலக வரலாறானது கி.மு -  கி.பி  என கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என வரையறுக்கப்பட்டுள்ளது . . என் வரலாறும் 'பா.மு - பா.பி' உன்னை ' பார்ப்பதற்கு முன் - பார்த்த பின் ' என வரையறுக்கப்படும் !

உயிர்பித்திடுவாயாக!

மீளா இரவும் தூங்கா விழிகளும் மெல்ல தழுவிடும் தென்றலும் புன்னகைத்த நிலவும்  உம் முகமும் இருண்ட வான்வெளியில் மிண்ணும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்களும்  கண்ணடிக்கும் உம் விழிகளும்  நீண்ட கரையும் ஓயாத அலையும் ஓர பார்வையும் கலங்கரை விளக்கும்  உம் அசைவும் அதில் இசையும் இதயமும் யானும் யாவும் என் காதலும் . . . . . உம் விடியலை நோக்கியே! பூவே மௌனம் உடைத்து உம் காதல் கதிர்களால் நினைவிலும் நிஜத்திலும் .........அரவணைத்து உயிர்பித்திடுவாயாக!

பரிசுபெட்டி!

இதோ உனக்காக ஒரு பரிசுபெட்டி உள்ளே ஒன்றுமில்லை?! பரிசு இருந்தால் என்னவாயிருக்கும்? நான் இன்று உன்னால் என்ன ஆகிவிட்டேனோ அதுவாகி இருக்கும்! புரிந்துகொள் உள்ளிருப்பது நான் தான்! . . . . . . . வெற்றிடமாய்.

மரணித்து பிறப்பேன்!

மரணித்து பிறப்பேன் . . . . . . . .  தமிழுக்காகவும் உனக்காகவும்!

அவள் நினைவுகள் !

Image

இன்றும் என்றும் உன் நினைவில்.....

இரத்தம் சிந்தவில்லை உணவை வெறுக்கவில்லை மணிகணக்கில் கண்ணாடியைமுறைத்ததில்லை கலைந்த தலைமுடியை கூட கொத்தி விடஎண்ணியதில்லை தூக்கம் தொலைக்கவில்லை புத்தி பேதலிக்கவில்லை என்னைப்பற்றி கவலை கொண்டதில்லை இன்றோ ?  தினமும் கண்ணாடியில் கண் விழிக்கிறேன் உன்னை காணும் ஓரிரு நிமிடிங்களுக்காகஅழகனாகின்றேன் தூக்கம் கொல்லாமல் கனவுகள் மட்டும்காண்கிறேன் உன்னை எனக்கானவள் ஆக்கிவிட்டேன் நான் நீயாக மாறி தினமும் என்னை காதல்செய்கிறேன் அதை உன்னிடம் சொல்லியும் விட்டேன் நான் நீயாக ,நீ நானாகிவிட்டாய் ! ஒரு வார்த்தையில் என்னை உன்னிலிருந்து பிரித்துவிட்டாய் உன்னை வெறுக்கவில்லை என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் உனக்கான நிமிடங்களில் சிறகடித்த சிறகுகளுக்கு கூட கண்கள் முளைத்துவிட்டன … இப்போது உன்னை காணும்போதெல்லாம் அவை வெட்கி ஒளிந்து கொள்கின்றன மின்னல்கள் வீசி சென்ற உன் ஓரபார்வைகள் இன்றோ இடியை இறங்குதடி இத்தனைக்கும் தவறேதும் செய்துவிட வில்லை உன்னை விரும்பியதை தவிர ..... இன்றும் என்றும் உன் நினைவில்!

அழகிய தடுமாற்றம்

அடை மழையாய் பேரிடியாய் புது வெள்ளமாய் எரிமலையாய் சுடும் வெயிலாய் வாள் வீச்சாய் அனலாய் பேசிய உதடுகள் . . . . . . . உன்னிடம் தடுமாறுவதேனோ !? ...