இரத்தம் சிந்தவில்லை உணவை வெறுக்கவில்லை மணிகணக்கில் கண்ணாடியைமுறைத்ததில்லை கலைந்த தலைமுடியை கூட கொத்தி விடஎண்ணியதில்லை தூக்கம் தொலைக்கவில்லை புத்தி பேதலிக்கவில்லை என்னைப்பற்றி கவலை கொண்டதில்லை இன்றோ ? தினமும் கண்ணாடியில் கண் விழிக்கிறேன் உன்னை காணும் ஓரிரு நிமிடிங்களுக்காகஅழகனாகின்றேன் தூக்கம் கொல்லாமல் கனவுகள் மட்டும்காண்கிறேன் உன்னை எனக்கானவள் ஆக்கிவிட்டேன் நான் நீயாக மாறி தினமும் என்னை காதல்செய்கிறேன் அதை உன்னிடம் சொல்லியும் விட்டேன் நான் நீயாக ,நீ நானாகிவிட்டாய் ! ஒரு வார்த்தையில் என்னை உன்னிலிருந்து பிரித்துவிட்டாய் உன்னை வெறுக்கவில்லை என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் உனக்கான நிமிடங்களில் சிறகடித்த சிறகுகளுக்கு கூட கண்கள் முளைத்துவிட்டன … இப்போது உன்னை காணும்போதெல்லாம் அவை வெட்கி ஒளிந்து கொள்கின்றன மின்னல்கள் வீசி சென்ற உன் ஓரபார்வைகள் இன்றோ இடியை இறங்குதடி இத்தனைக்கும் தவறேதும் செய்துவிட வில்லை உன்னை விரும்பியதை தவிர ..... இன்றும் என்றும் உன் நினைவில்!