பாவத்தின் சம்பளம் .....முத்தம் !

என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன் என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன் என் உடன்பிறப்புகளின் சிறுசிறு ஆசைகளை கொன்று வந்துள்ளேன் தினமும் காலையில் நான் எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும் என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து, உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள் பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை பிடிக்கவில்லை என உதறி தள்ளுவேன் கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள் மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன் வலிகளை பொருத்து புன்னகை புரிவாள் நான் வண்ண வண்ண சட்டைகளை அணிய என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில் காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியும் தான் அணிந்திருந்தார் வாயை கட்டி வயிற்றை கட்டி எனக்காக தியாகம் செய்த அவர்கள் வாழ்கையை கூட மதிக்காமல் ஊதாரியாய் செலவிழுத்தேன் தான் படிக்கவில்லை என்பதால் என் படிப்பிற்காக எதையும் செய்தார்கள் நானோ படிக்க எதையும் செய்யவில்லை....? மழைக்கு கூட சமையலறை பக்கம் ஒதுங்கதாவன் சாப்பிட தட்டை கூட அலம்பதாவன், ...